அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மும்பை சென்று செட்டிலானார் என்று சொல்லப்பட்டது. அங்கு இருந்தால்தான் வாய்ப்புகளைப் பெற முடியும் என மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைக் கேட்டுத்தான் சென்னையை விட்டு மும்பைக்குப் போனார் என்பது கோலிவுட் தகவல்.
அவர் அங்கு செட்டிலான பின்பு பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 'கர்ணா' படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக தகவலாகவே இருக்கும் அப்படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஓம்பிரகாஷ்.
'கர்ணா' படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.