அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் |
இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தவர் பி.எஸ்.நிவாஸ். மலையாள சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என அந்தக் காலத்தில் ஒளிப்பதிவுக்கு பேசப்பட்ட படங்களுக்கு நிவாஸ் ஒளிப்பதிவு செய்தார்.
1980ம் ஆண்டு பாரதிராஜா 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எடுத்தார். தனது சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கினார் பாரதிராஜா. படப்பிடிப்புக்காக கிராமத்துக்கு செல்லும் பாரதிராஜாவை கிராமத்து பெண் ஒருத்தி காதலிப்பது மாதிரியான கதை. இந்த படத்தை முதலில் பாரதிராஜாவே இயக்கினார். சில நாட்களுக்கு பிறகு தன்னை தானே இயக்குவதில் சிரமம் இருந்ததால் படத்தின் ஒளிப்பதிவாளரான நிவாசை அழைத்து 'நீயே படத்தை இயக்கு' என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
சொல்லப்போனால் பாரதிராஜாவின் முதல் தோல்வி படம் இது. அதன் பிறகு பாரதிஜாவும், நிவாசும் பிரிந்தனர். கண்ணன் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆனார். நிவாஸ் தனது ஒளிப்பதிவு பணியை வெவ்வேறு இயக்குனர்களுடன் தொடர்ந்தார். அதோடு எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சம், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கவும் செய்தார்.