''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
பிரேம் குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மெய்யழகன்'. அப்படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது. ஆனால், படத்தைப் பார்த்த பலரும் படத்தின் நீளம் அதிகம் என்றும், தேவையற்ற சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், இயக்குனர் பிரேம்குமார் அப்படி காட்சிகளைக் குறைக்க சம்மதிக்கவில்லை, பிடிவாதம் பிடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திலிருந்து 18 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு அதற்குரிய காரணத்தையும் கூறியிருந்தார் பிரேம்குமார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தக் காட்சிகளைத் தூக்கியது குறித்துப் பேசியுள்ளார். “சூர்யா, கார்த்தி ஆகியோர் காட்சிகளைக் குறைக்கக் கூடாது என்று சொன்னார்கள். நம்ம புள்ளையையே மூக்கு சரியில்லை, காது சரியில்லன்னு சொல்லலாமா, என்ன எடுத்தோமோ அது அப்படியே போகட்டும்னு சொன்னாங்க. சூர்யா கிட்ட சொன்ன போது கொந்தளிக்கிறாரு. எதுக்கு அப்படியே இருக்கட்டும் எல்லாரும் ரசிக்கிறாங்க, நல்லா இருக்கிற விஷயத்தை ஏன் குறைக்கனும்னு கேட்டாரு.
ரசிக்கிறதும் ஒரு சதவீதம், ரசிக்காதவங்களும் இருக்காங்க. அவங்களையும் கணக்குல எடுத்துக்கணும். இந்த இரண்டும் சேர்ந்ததுதானே ரசிகர்கள். பிடிச்சவங்கதான் ஆடியன்ஸ், பிடிக்காதவங்க எப்படியோ போங்கன்னு சொல்ல முடியாது. மனசை கல்லாக்கிட்டுதான் அதை தூக்க வேண்டி இருந்தது. என்னைத் தவிர வேற யாருக்கும் அதுல உடன்பாடு இல்ல. சூர்யா அண்ணன் கோவிச்சிக்கல, அவருக்கு காட்சிகளை நீக்கினதுல உடன்பாடு இல்ல,” என்று விளக்கமளித்துள்ளார்.