வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படம் என்கவுன்டர் பற்றி பேசும் படம் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி, பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், வேட்டையன் படத்தில் இடம் பெற்றிருக்கும் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், லைகா நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.