கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுசுக்கு ஏற்பட்டுள்ள தசை சிதைவு நோய் காரணமாக சிகிச்சை செய்ய அமெரிக்காவுக்கு சென்றவர் பின்னர் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அதோடு தனது மகன் தனுசுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தினார். ஆனால் தசை சிதைவு ஏற்பட்டுள்ள மகனுக்கு எதற்காக இவர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நடிகர் நெப்போலியன் இன்ஸ்டாவில் ஒரு உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார் . அதில், அன்பு நண்பர்களே, உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் வசிக்கிறோம். ஒரு வருடமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்களது வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடைய பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ்ந்தாக வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதை வாழ்ந்து தான் பார்ப்போமே.
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மாற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். எங்களை போன்று உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஒரு பக்க சொல் ஒரு யானை பலம். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். ஏனென்றால் அது ஒருநாள் உங்களுக்கே திரும்பி விடும். எண்ணம் போல் தான் வாழ்க்கை. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.