பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் |
தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா, 'பூவே உனக்காக' சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு 'அருவி' என்ற சீரியலில் நடித்தவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'மௌனம் பேசியதே' என்ன தொடரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்த 'பூவே உனக்காக, அருவி' போன்ற தொடர்கள் தனக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், இந்த 'மௌனம் பேசியதே' தொடர் அதைவிட மிகப்பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தும். அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் ஜோவிதா.