கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுஜாதா. அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். தற்போது சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தி உள்ள சுஜதா 'டாக் குக் டூப் குக்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றுள்ளார். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இவர் எளிதாக வைத்த பூசணிக்காய் சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவரே டைட்டில் வின்னராகி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் மதுரையில் இருந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அழைக்கும் போது சென்னை வந்தோ அல்லது பிற ஊர்களுக்குச் சென்றோ நடித்துக் கொடுத்து வருகிறேன். மற்றபடி என் குடும்பம் மதுரையில் தான் இருக்கிறது.
இந்நிலையில் பலரும் என்னை டிவி ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். ஏன் பிக்பாஸுக்குக்கூட கடந்த முறை எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் , தேதிகள் சரியாக அமையாது. அதனால் நடிக்கும் படங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தவிர்த்து வந்தேன். அதனால் இப்படிப்பட்ட டிவி ஷோக்களில் பங்கெடுப்பதில் நிறைய தவிர்த்தது உண்டு. அப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் குக்வித் கோமாளி ஷோ தயாரித்த மீடியா மேசன்ஸ் குழுவினர் என்னை பலமுறை அழைத்தார்கள். முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது உண்மைதான். பிறகு நிகழ்ச்சிக்குள் போகப் போக ஈடுபாடு வந்து விட்டது.இதோ டைட்டில் வின்னர் வரை வந்திருக்கிறது.
சமையல் என்பது சுமையல்ல, அது ஒரு கலை. எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் அதுவும் ஈடுபாட்டோடு புதுமையாக செய்வது பிடிக்கும். குறிப்பாக அசைவம் நன்றாகவே சமைப்பேன். ஆனால் வீட்டில் சமைப்பது என்பது வேறு, போட்டியில் சமைப்பது என்பது வேறு. ஆரம்பத்தில் அந்த ஷோ எனக்குப் பிடிபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நான் புரிந்து கொள்ளவே நான்கைந்து வாரங்கள் தேவைப்பட்டன. அதனால் நான்கைந்து எபிசோட்கள் அவ்வளவு சுவாரசியமாக நான் பங்களிப்பு செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதாவது வீட்டில் செய்யக் கூடிய கறி தோசை, அடை தோசை, கார்லிக் சிக்கன் என்று வழக்கமாக வீட்டில் செய்வது போல் தான் ஆரம்பித்தேன். அப்படி ஒரு புரிதல் இல்லாமல் தான் நான் வந்து சாம்பார் வைத்தேன். அதற்காக செஃப் வெங்கடேஷ் பட் சார் மிக எளிதாக வீட்டு சமையலாகவே செய்கிறீர்கள் என்று கூறியது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அந்த வார்த்தைகள் யோசிக்க வைத்தது.
நான் பொதுவாக வீட்டில் ஆர்வமாக சமைக்கக் கூடியவள் தான். நம் சமையல் குறை சொல்லி விமர்சிக்கப்பட்டதே என்று எனக்கு வருத்தமாக மட்டுமல்ல கோபமாகவும் இருந்தது.எனக்குள் என்ன பிரச்சினை என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
சில அவமானங்கள், எனது ஈகோவைத் தூண்டி விட்டது போல் நினைத்தேன்.என்னால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்குள் அந்த ஆர்வம் ஈடுபாடாக மாறி ஒரு கட்டத்தில் வெறியாகவே ஆனது. எனக்குள் ஒரு ரோஷம் வந்து விட்டது. எப்படியாவது சமையலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கினேன். நிறைய சமையல் குறித்து தேட ஆரம்பித்தேன். ஏகப்பட்ட புதிய ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்தேன்.
சமையலில் முக்கியம் ருசி தான். ஆனால் ருசி நன்றாக இருக்கிறது, பிரசன்டேஷன் நன்றாக இல்லை என்பார்கள். பிறகுதான் தெரிந்தது இப்படி வேறு பல விஷயங்களும் உண்டு என்று. எல்லா விசயங்களையும் தேடிப் பிடித்தேன். அந்த ஷோவில் நான் சமைக்க ஆரம்பித்து செப் ஆப் த வீக், என்று தேர்வு செய்யப்பட்டு ஆறு முறை அந்த வாரத்துக்கான சிறந்த சமையல் கலைஞர் பரிசு பெற்றேன்.
பொதுவாக எனக்கு பேக்கரி அயிட்டங்களிலேயே ஆர்வம் இருந்ததில்லை. இதற்காக இறங்கி பிறகு தீவிரமாகக் தேடினேன். அந்தத் தேடலின் விளைவால் சமையல் பற்றிய அந்த ஆர்வத்தைக் கடைசி வரை குறையாமல் வைத்திருந்ததால் தான், நான் கடைசியில் டைட்டில் வின்னர் ஆனேன். என்றார்.