நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியன்- 2 படத்தை அடுத்து ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே தெலுங்கில் ராம்சரண் நடித்த மாவீரன், ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தன. அதோடு இப்படத்தை ஷங்கர் இயக்குவதால் தமிழிலும் நேரடி படம் போலவே வெளியாக உள்ளது. குறிப்பாக இந்தியன்-2 படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்பதால் இந்த கேம்சேஞ்சர் படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தற்போது தீவிரம் அடைந்து இருக்கிறார் ஷங்கர்.
மேலும் தனது படங்களின் பாடல் காட்சிகளில் பல புதுமைகளை செய்துவரும் ஷங்கர், ஜீன்ஸ் படத்தில் ஏழு உலக அதிசயங்களை காண்பித்திருந்தார். இந்நிலையில் இந்த கேம் சேஞ்சர் படத்தில் ஏழு மாநிலங்களின் அடையாளமாக இருக்கும் முக்கிய இசை கருவிகளை பயன்படுத்தி இசையமைப்பாளர் தமன் மூலம் ஒரு பாடலை உருவாக்கியுள்ளாராம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள நாதஸ்வரம், கேரளாவில் செண்டை மேளம் சிறந்த இசைக்கருவிகளாக இருப்பது போன்று இந்தியாவில் உள்ள மேலும் ஐந்து மாநிலங்களின் சிறந்த இசை கருவிகளையும் இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார் ஷங்கர்.