பாலிவுட் வாரிசுகள் நடிக்கும் 'ஆசாத்' | அல்லு அர்ஜுன் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி | நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அது தெலுங்கு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 எடி' படமே முதல் நாளில் 191 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் 'தேவரா' படம் 172 கோடி எப்படி வசூல் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.
இதனிடையே, படத்தின் இரண்டாவது நாளுடன் சேர்த்த வசூல் 243 கோடி என்று அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலான 172 கோடியுடன் ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் 71 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அவ்வளவு பாதியாக வசூல் குறைந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய வசூலையும் சேர்த்து நாளை 300 கோடி வசூல் என அறிவிப்புகள் வரலாம். அதன்பின் வார நாட்களில் படம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.