திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதுவரை சூர்யா இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வந்தார். இப்போது இந்த படத்திற்காக க்ளின் ஷேவ் செய்து இன்னொரு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றாரா அல்லது இரண்டு தோற்றத்தில் நடிக்கின்றாரா என்பது குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.