வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மிகவாதியாக திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஸாரி நோ கமென்ட்ஸ்' எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.
மேலும் அவர், 'தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தர்பார் போன்று வேட்டையன் இருக்காது, வித்தியாசமாக இருக்கும். வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்றார் ரஜினி.
சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள். உங்களை மாதிரி திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி' என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.