சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அழைக்கப்படும் அவர் மறைந்து ஓராண்டை நெருங்குகிறது. இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் அவரை கவுரவிக்கும் விதமாக படங்களில் அவரை காண்பித்தோ, அவரது பாடல்களை ஒலிக்க விட்டோ பெருமை செய்து வருகிறார்கள். சமீபத்தில் விஜய்யின் ‛தி கோட்' படத்தில் ஏஐ மூலம் அவரை காண்பித்தனர்.
கடந்தவாரம் வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகனான தினேஷை, விஜயகாந்த்தின் ரசிகராகக் காட்டினர். அவரது வீட்டு வெளியே விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து வைத்தனர். அதோடு விஜயகாந்த் நடித்து இளையராஜா இசையில் வந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்கவிட்டனர். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதுதான் விஜயகாந்தைப் பெருமைப்படுத்தும் படம் என அவரது ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறுகையில், 'திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து,' என்றார்.