அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஜாக்கி சான் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'ஏ லெஜண்ட்'. இது அவர் நடித்த 'தி மித்' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ஜாக்கி சான் தவிர லே சாங், நா ஜா, ஆரிப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும் ஜெங் யெச்சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் இளம் வீரர் என இரண்டு பேர் ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் கதை. இதில் அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளராகவும், இளம் வீரராகவும் ஜாக்கிசான் நடித்துள்ளார். அவரது இளமை தோற்றம் 'கோட்' படத்தில் விஜய்யின் தோற்றம் மாற்றப்பட்டது போன்று 'ஏஐ' தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது.
படத்தை இயக்கி உள்ள ஸ்டான்லி டாங், ஜாக்கி சானுடன் பலமுறை இணைந்து பணியாற்றி உள்ளார். 1992ம் ஆண்டிலேயே, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வசூல் சாதனைகளை முறியடித்த அவர் இயக்கிய போலீஸ் ஸ்டோரி, மிமி : சூப்பர் காப் படம் பெரிய வெற்றி பெற்றது. 'ரம்பிள் இன் தி பிராங்க்ஸ், 'போலீஸ் ஸ்டோரி 4 : பர்ஸ்ட் ஸ்ட்ரைக்,' 'தி மித்', 'குங் பூ யோகா', படங்களையும் இயக்கினார்.
'ஏ லெஜன்ட்க் ('தி மித் 2') திரைப்படத்திற்காக ஜாக்கி சானும் ஸ்டான்லி டாங்கும் மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் உருவாகி உள்ள இந்த படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.