ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னனி பாடகர் மனோ. சில படங்களில் நடித்தும் உள்ளார். இது அல்லாமல் தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு பின்னனி குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக முத்து படத்திலிருந்து கடைசியாக ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலர் படத்தின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ரஜினிக்கு மனோ தான் குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, பஹத் பாசில், துஷாரா விஜயன் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அக்., 10ல் வெளியாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்து பேசியுள்ளார் மனோ.