23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் அர்ச்சனா ரவிச்சந்திரன் அதற்பிறகு ராஜாராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக் பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். பின்னர் 'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகத்தில் நடித்தார். பிக் பாஸ் டைட்டில் வென்றும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை.
இதனால் தற்போது இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே இமைகாலோ, தம்மா துண்டு காதல் என்ற இசை ஆல்பங்களில் நடித்துள்ள அவர் தற்போது 'டாக்ஸிக் காதல்' என்ற இசை ஆல்பத்தில் கவர்ச்சியாக ஆடியுள்ளார். இது ஒரு பார்ட்டி சாங் ஆல்பமாக உருவாகி உள்ளது. தடம், எறும்பு, பீட்சா -3, பைரி போன்ற படங்களுக்கு இசையமைத்த அருண் ராஜ், இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். அர்ச்சனாவே பாடியும் உள்ளார்.
இதுகுறித்து அர்ச்சனா கூறும்போது "அருண் இந்த படைப்புக்காக என்னை அணுகியதும், 'டாக்ஸிக் காதல்' என்ற கரு என்னை உடனடியாக கவர்ந்துவிட்டது. இது நம்மில் பலருக்கும், குறிப்பாக 'ஜென்-ஸீ' என்றழைக்கப்படும் இந்த தலைமுறையினருடன் தொடர்புடையது, மேலும் இந்த இசைப் பயணத்தில் நான் பங்கேற்பது அந்த உணர்வுகளை புதிய வழியில் வெளிப்படுத்த வழிவகுக்கிறது. நாங்கள் உருவாக்கியதை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.