Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான்

22 செப், 2024 - 05:41 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salmaan-in-Devara-alliance;-This-is-the-background


ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படமாக உருவாகியுள்ளது தேவரா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து ஹைதராபாத், சென்னை என சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது தேவரா படக்குழு. இந்த நிலையில் தேவரா படத்தின் தயாரிப்பாளர், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் கொரட்டாலா சிவா ஆகியோருடன் துல்கர் சல்மான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், “புதிய ஆரம்பம் செப்டம்பர் 27ல் துவங்க இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தேவரா படக்குழுவினருடன் துல்கர் சல்மான் கைகோர்த்துள்ளது எதற்காக என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கேரளாவில் நடைபெறும் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்காகவோ அல்லது துல்கர் சல்மான் தனது வே பாரர் நிறுவனம் மூலம் தேவரா படத்தை கேரளாவில் வெளியிடவோ இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன ... நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)