Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ?

22 செப், 2024 - 05:39 IST
எழுத்தின் அளவு:
Will--Sabumon-Abdusamad-be-enlightened-by-the-Vettaiyan-like-Vinayakan-the-Jailer


ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராணா, பகத் பாஸில் இருவரும் இருந்தாலும் வில்லனாக ராணா தான் நடித்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமல்ல பஹத் பாசில் இந்த படத்தில் ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் இன்னொரு மலையாள வில்லனும் இந்த படத்தின் மூலம் தமிழில் நுழைந்துள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. அவர் வேறு யாருமல்ல வில்லன் நடிகர் சாபுமோன் அப்து சமது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒரு முரட்டு வில்லனாக ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானவர் தான் நடிகர் சாபுமோன்.. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னர் கடந்த 2018ல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக கோப்பையையும் தட்டி சென்றார். கடந்த வருடம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த மலையாள வில்லன் நடிகர் விநாயகன் ரஜினிக்கு இணையாக பேசப்பட்டார். அந்த வகையில் இந்த வேட்டையன் திரைப்படமும் சாபுமோனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில்துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: ... பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் பாலியல் புகார் எதிரொலி ; ஜானி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)