ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
விஜய் சேதுபதி- திரிஷா நடித்த 96 என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அப்போது கார்த்தி இடத்தில் அவரது அண்ணனான சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டர் குறித்து விடுக்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அந்த ரோலக்ஸ் வேடத்தில் என் அண்ணனை பார்த்ததும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. என்றாலும் சிறுவயதில் இருந்தே சூர்யாவை அந்த ரோலக்ஸ் கேரக்டரில்தான் நான் பார்த்து வருகிறேன். அதனால் அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியுள்ளார் கார்த்தி.