சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமா உலகில் கடந்த ஓரிரு வாரங்களாக, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தன் பிரிவு பற்றி ஒரு அறிக்கை வெளியிட, அதற்கடுத்து அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 'பிரதர்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் 'லாகின்' விவரங்கள் கூட தன்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வகித்து வந்தார்கள் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார்.
கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின் எந்த பதிவையும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தன்னுடைய 'லாகின்' விவரங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான 'பிரதர்' பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். அந்தப் பதிவுகளிலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.