Advertisement

சிறப்புச்செய்திகள்

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின

17 செப், 2024 - 06:03 IST
எழுத்தின் அளவு:
Search-in-the-prison-where-Darshan-was;-15-cell-phones,-7-stoves,-5-knives-were-caught


பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியான நடிகை பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருக்கும்போது தனது வழக்கறிஞர் மூலமாக பல சலுகைகள் வேண்டும் என அவர் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் அதே சமயம் மறைமுகமாக அவருக்கு சிறையில் அனைத்து வித வசதிகளும் கிடைத்தன. அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவர் இங்கே இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் வில்சன் கார்டன் நாகா என்கிற கேங்ஸ்டர் தான். அதனால் அந்த பகுதியில் எப்போதும் போலீசார் பெரிய அளவில் சோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் தர்ஷன் இருந்த அந்த சிறைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கே 15 மொபைல்கள், 7 எலக்ட்ரிக் அடுப்புகள், 5 கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணமும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கின. இவையெல்லாம் தர்ஷன் அங்கிருந்த போது அவருக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறதுநாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: ... மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)