வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவ். அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரிந்தவர். அவரது 'தேவதாஸ்' படம்தான் இன்றைய பல காதல் திரைப்படங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியான படமாக இருக்கிறது. அப்படத்திற்கு முன்பாகவே சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், 'தேவதாஸ்' படம் இன்று வரை அவரை மறக்க வைக்காமல் இருக்கிறது.
தொடர்ந்து 'மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, அலாவுதீனும் அற்புத விளக்கும், மஞ்சள் மகிமை, அதிசயப் பெண், கல்யாணப் பரிசு, தெய்வமே துணை, வாழ்க்கை ஒப்பந்தம், எங்கள் செல்வி, பாட்டாளியின் வெற்றி, அன்பு மகன், மனிதன் மாறவில்லை,' என 1969 வரை தொடர்ந்து தமிழிலும் நடித்தார். அதன் பின் தெலுங்கில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
நேற்றுடன் அவருக்கு 100 வயது நிறைவுற்றது. அவரை நினைவு கூறும் விதத்தில் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
அக்கினேனி நாகேஸ்வரராவின் நூற்றாண்டு கொண்டாட்டம் மத்திய அரசு ஆதரவுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன் துவக்கமாக 'எஎன்ஆர் - கிங் ஆப் த சில்வர் ஸ்கிரீன்' திரைப்பட விழா, என்எப்டிசி உதவியுடன் பிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் மூலம் நேற்று ஐதராபாத்தில் கொண்டாடப்பட்டது. அவர் நடித்த 'தேவதாஸு' படத்தை நேற்று திரையிட்டனர்.
நிகழ்ச்சியில் அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் நாகார்ஜுனா, அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில், ஆகியோருடன் மகள் வழிப் பேரன்களான சுமந்த், சுஷாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நாகார்ஜுனா, நாடு முழுவதும் 31 நகரங்களில் தனது அப்பாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்திய அரசு கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.
2024ம் ஆண்டிற்கான 'எஎன்ஆர்' நினைவு விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அக்டோபர் 28ம் தேதி திரையுலகத்தினர் கலந்து கொள்ள அந்த விருதை அமிதாப்பச்சன் வழங்க உள்ளதாகவும் கூறினார்.