காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அக்னினேனி நாகேஸ்வரராவ். அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் அகில், நாக சைதன்யா இப்போது நடித்து வருகிறார்கள். தற்போது அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. பிலிம் ஹெரிட்டேஜ் நிறுவனத்துடன் இணைந்து இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும், இந்த விழாவில் நாகேஸ்வரராவின் புகழ்பெற்ற வெற்றிப் படங்களை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தியேட்டரில் திரையிடுகிறது. இந்த விழாவில் தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்கரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், பிரேம் நகர் மற்றும் மனம்க் உள்ளிட்ட பல படங்கள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 31 நகரங்களில் இந்த திரையிடல் நடக்கிறது.