'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததால் அதன் பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகின்றார்.
கடைசியாக தமிழில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் தமிழில் பட வாய்ப்புகள் பூஜா ஹெக்டேவிற்கு குறைந்தது.
இந்த நிலையில் திடீரென மீண்டும் பூஜா ஹெக்டேவிற்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இப்போது சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இதைத்தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார். மேலும், ராகவா லாரன்ஸ்-ன் காஞ்சனா 4, விஜய் 69வது போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.