அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பழம்பெரும் நடிகையான லதா(71). மறைந்த நடிகர் எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்துள்ளார். அவரின் ஆஸ்தான நடிகைகளில் இவரும் ஒருவர். 100 படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் சினிமாவில் தனக்கு பிடித்த வேடங்களில் மட்டும் அவ்வப்போது நடிக்கிறார். சில சீரியல்களிலும் நடிக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார்.
எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் மற்ற நடிகர்களான முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்டோருடனும் நடித்தார் லதா. பல ஹீரோக்களுடன் இவர் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினி உடன் மட்டும் இவரை வைத்து நிறைய கிசு கிசுகள் அப்போது வந்தன. இதுபற்றிய கேள்விக்கு இப்போது ஒரு பேட்டியில் நடிகை லதாவே பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : ‛‛ரஜினியை பொருத்தமட்டில் மிகவும் நல்லவர். எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். அந்த சமயம் தான் அவர் வளர்ந்து வரும் நடிகர். நான் அப்பவே எம்ஜிஆர் படத்தின் ஹீரோயின். ஆழியாறு அணை அருகே ‛ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நானும், மஞ்சுளாவும் நல்ல தோழிகள். மாலை நேரத்தில் எங்களுடன் வந்து ரஜினி அமர்ந்து கொள்வார். நல்லா பேசுவோம், சாப்பிடுவோம், கோயிலுக்கு எல்லாம் போவாம், அவ்வளவு தான். மற்றபடி எதுவும் கிடையாது.
இப்ப வர கிசு கிசு எல்லாம் ஒன்னுமில்லை. அப்போது எல்லாம் நிறைய கதை சொல்வார்கள். ஆனால் அது எதுமே உண்மையில்லை. ரஜினி ஒரு நல்ல மனிதர். இப்போது வரை நான் மதிக்கின்றன ஒரு நடிகர் என்பதை விட மனிதர். உலகளவில் அவர் புகழ்பெற்ற நடிகர் என்றாலும் கூட இன்றைக்கும் மிகவும் எளிமையான, அடக்கமான மனிதராக உள்ளார். அதனாலேயே இப்போது வரை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.