பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கடந்த மாதம் கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதுடன் பல பேர் தங்கள் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் வயநாடு பகுதியைச் சேர்ந்த சுருதி என்கிற பெண்ணும் ஒருவர். அந்த நிலச்சரிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை ஒரே நேரத்தில் பறிகொடுத்து மிகப்பெரிய துயரத்திற்கு ஆளானார். அந்த சமயத்தில் அவருக்கு ஆதரவாக நின்றது அவரது நண்பரும், வருங்கால கணவருமான ஜென்சன் என்பவர் தான்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜென்சன், சுருதி மற்றும் சுருதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஒரு ஆம்னி வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராமல் ஒரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டிய ஜென்சன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து கேரளாவில் உள்ள மக்கள் பலரும் ஜென்சனுக்கு தங்களது இரங்கலையும் சுருதிக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்த துயர நிகழ்வு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டு சுருதிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜென்சனின் மறைவு மிகப்பெரிய சோகத்தை கொண்டு வந்துள்ளது. சுருதியின் வலி என்பது கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாதது. சுருதி மற்றும் ஜென்சனின் அன்பான குடும்பத்தினர் அனைவரும் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.