ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நடிகரான விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமான 'தி கோட்' படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான சுருக்கமான முன்னோட்டக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து சில முக்கிய விமர்சனங்கள் வெளிவந்தன. அது 'புரியவில்லை' என்ற விமர்சனம்தான். அடுத்து இரண்டாம் பாகம் வரும் போதுதான் அதற்கு விளக்கமான காட்சிகள் இடம் பெறும். ஆனால், அடுத்து தயாராக உள்ள 'விஜய் 69' படத்துடன் நடிப்பை விட்டு விலக உள்ளார் விஜய்.
அது மட்டுமல்ல, 'லியோ' படத்தின் கிளைமாக்சில் 'விக்ரம்' படத்தின் கமல்ஹாசனும், விஜய்யும் தொலைபேசியில் பேசிக் கொள்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 'எல்சியு' அடுத்து தொடர்ந்தால் அந்த தொலைபேசி காட்சிக்கான விளக்கங்கள் இடம் பெறலாம். அது 'லியோ 2' படமாகவும் இருக்கலாம், அல்லது 'விக்ரம் 2' படமாகவும் இருக்கலாம்.
விஜய் சினிமாவை விட்டு விலகக் கூடாதென திரையுலகினரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா, வெற்றி பெறுவாரா, தோல்வியடைவாரா என்ற பல கேள்விகள் இப்போதே எழுந்துள்ளன. அதைப் பொறுத்தே 'லியோ 2, தி கோட் 2' ஆகியவற்றின் நிலை என்னவென்பது தெரிய வரும்.