அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்கள். இதில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ரீமா கலிங்கல் கூறும்போது "ஹேமா கமிட்டியில் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்களது கருத்துக்களை கூறுவதற்காக முதல்வரை சந்தித்தோம். தற்போது மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.