Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதிக்கு பதில் அளிக்க 'ஏஞ்சல்' பட தயாரிப்பாளருக்கு கோர்ட் உத்தரவு

10 செப், 2024 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Court-orders-the-producer-of-Angel-to-respond-to-Udayanidhi

தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் முன்னர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது பெரும்பாலும் தனது சொந்த தயாரிப்பு படங்களிலேயே நடித்து வந்தார். அபூர்வமாக ஒரு சில படங்களில் மட்டுமே வெளி தயாரிப்பாளர்கள். அப்படியான ஒரு படம் 'ஏஞ்சல்'.

இந்தப் படத்தை ஓஎஸ்டி பிலிம் சார்பில் ராம சரவணன் தயாரித்தார். உதயநிதி ஜோடியாக ஆனந்தி, பாயல் ராஜ்புட் நடித்தனர். கே.எஸ் அதிகமான் இயக்கினார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் டிராப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ராம் சரவணன் 'படத்திற்கு உதயநிதி ஒத்துழைப்பு தராததால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதற்கு உதயநிதி இழப்பீடு தர வேண்டும் என்றும் ' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் "உதயநிதி நாயகனாக நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு. அதன்படி 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. 20 சதவீதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என அறிவித்திருந்தார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், காலதாமதத்திற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு தாய் பற்றி பேசிய படம்பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு ... கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in