சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
இன்றைக்கு நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாத 1980ல் வந்த படம் 'அவன் அவள் அது'.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது சிவசங்கரியின் 'ஒரு சிங்கம் முயலாகிறது' என்ற நாவலை தழுவி உருவானது. விசு திரைக்கதை, வசனம் எழுதினார். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். 'இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்...' என்ற புகழ்பெற்று பாடல் இடம் பெற்றிருந்தது இந்த படத்தில் தான்.
சிவகுமாரும், லட்சுமியும் கணவன் மனைவி. இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. சிவகுமாரின் தந்தைக்கு வாரிசை பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அப்போது வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்த 'வாடகை தாய்' முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி வாடகைக்கு தாய் ஸ்ரீ பிரியா மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாடகைத்தாய் யார் என்பது மருத்துவர்கள் தவிர வேறு யாரும் அறிந்திருக்கக் கூடாது என்பது விதி. அதையும் மீறி இவர் தான் வாடகைத்தாய் என்பது தெரிந்து விட்டால் என்ன நடக்கும் என்பது மீதி கதை.