ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் நடிப்பில், யுவன் இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தி கோட்'. இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே இப்படம் ஓடியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தியேட்டர்களில் 'தி கோட்' படம் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடக் கூடியதாக இருந்தது. இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு எடிட் செய்து முடித்த போது 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக இருந்ததாம். அதன்பின்பு 37 நிமிடக் காட்சிகளைக் குறைத்துத்தான் தியேட்டர்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் போது அந்த குறைக்கப்பட்ட 37 நிமிடக் காட்சிகளையும் சேர்த்து 3 மணி நேரம் 40 நிமிடக் காட்சிகளாக இந்த படத்தை வெளியிடப் போகிறார்களாம். இத்தகவலை எக்ஸ் தளத்தில் 'ஸ்பேஸ்' பேச்சில் தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அப்படி வெளியிடலாம் என்ற தகவலை தயாரிப்பாளர் சொன்னதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
ஓடிடியில் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




