Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்த வாரிசு…பாலகிருஷ்ணா மகன் மோக்ஷனா நடிகராக அறிமுகம்

08 செப், 2024 - 11:26 IST
எழுத்தின் அளவு:
The-Next-Successor…-Balakrishnas-son-Mokshana-debuts-as-an-actor


இந்தியத் திரையுலகத்தில் அதிக வாரிசு நடிகர்களைக் கொண்ட திரையுலகம் என்றால் தெலுங்குத் திரையுலகம்தான். என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம் என அவர்களது குடும்பத்தில் பல வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தை அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் எப்போதுமே ஒரு சர்ச்சை உண்டு.

தற்போது என்டிஆர் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நடிகர் அறிமுகமாகப் போகிறார். என்டிஆரின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமூரி தாரக ராம மோக்ஷக்ன்யா தேஜா நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அவருடைய பிறந்தநாளில் வெளியானது.

'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 'சிம்பா' என்ற படத்தில் மோக்ஷ் அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ஜுனியர் என்டிஆர் தன்னுடைய வாழ்த்தில், “திரையுலகில் அறிமுகமாவதற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது, அனைத்து தெய்வீக சக்திகளும் இணைந்து தாத்தா அவர்களின் ஆசீர்வாதமும் சேர்ந்து உங்கள் மீது பொழியட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்திய அண்ணன் ஜுனியர் என்டிஆருக்கும் மற்றவர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் மோக்ஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்ட நடிகர் மீது 5 வருடம் கழித்து பாலியல் புகார் அளித்த நடிகைமன்னிப்பு கேட்ட நடிகர் மீது 5 வருடம் ... பெண் இயக்குனரை மட்டமாக நடத்திய சண்டக்கோழி வில்லன் பெண் இயக்குனரை மட்டமாக நடத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)