அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சினிமா தொடங்கிய காலத்தில் நாயகனும், நாயகியும் வசனங்களால் பேசிக் கொள்வதை விட பாடல்களால் பேசிக்கொள்வதுதான் அதிகம். நாடகத்தில் இருந்த இந்த வழக்கம் சினிமாவிலும் தொடர்ந்தது. அந்த வகையில் 50 பாடல்களுடன் வெளியான படம் 'திரௌபதி வஸ்திராபகரணம்' (திரவுபதியின் ஆடை அலங்காரம்). மகாபாரதத்தின் மிக முக்கிய பகுதியான பாஞ்சலியை துச்சாதனன் துகிலுறியும் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதனையே முழு நேர படமாக எடுத்திருந்தார்கள். 16 பாகங்களை கொண்ட படமாக கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் படமாக வெளிவந்தது.
தமிழ் சினிமாவின் முதல் நாயகியான டி.பி.ராஜலட்சுமி திரௌபதியாக நடித்தார். அன்றைய புகழ்பெற்ற பாடகர் வி.ஏ.செல்லப்பா துரியோதனனாக நடித்தார். செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். மற்றும் பி.எஸ்.சிவபாக்யம், வாசுதேவ பிள்ளை, பந்துலு அய்யர் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் ஏஞ்சல் பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. முழு படமும் கொல்கத்தா பயனியர் பிலிம் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு வெளியானது.