லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவை தவிர்த்து முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோசு என்பவர் இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'தீவினை போற்று' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 1990 காலகட்டத்தில் நடைபெறும் கதை களத்திற்கான அரங்கம் அமைத்து கடந்த 40 நாட்கள் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இப்போது இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் பாபு ஆண்டனி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்கிறார்கள்.