இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் படம் திரைக்கு வரும் நிலையில் இதன் டிரைலர் நாளை ஆகஸ்ட் 28ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.