Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிரஞ்சீவியின் இரண்டு படங்களின் இரண்டாம் பாக அறிவிப்பு

27 ஆக, 2024 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Announcement-of-the-second-part-of-Chiranjeevis-two-films


தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சிவி. எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரது நடிப்பில் 1990ம் ஆண்டில் வெளிவந்த 'ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' மற்றும் 2002ல் வெளிவந்த 'இந்திரா' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்புகள் சரியான நேரத்தில் வெளிவரும் என அப்படங்களின் தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார். தமிழில் டப்பிங் ஆகி வந்த 'நடிகையர் திலகம், கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அஷ்வினி தத்.

சிரஞ்சிவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'இந்திரா' படம் ரீ-ரிலீஸ் ஆனது. அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் அஷ்வினி தத், இயக்குனர் பி கோபால், வசனகர்த்தா பருச்சூரி பிரதர்ஸ், இசையமைப்பாளர் மணிசர்மா ஆகியோர் சிரஞ்சீவியை அவரது வீட்டில் சந்தித்தனர். அதற்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் அஷ்வினி தத் மேற்கண்ட இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் பற்றியும் பேசினார்.

''ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' படத்தை ராகவேந்திரா ராவ் இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். சிரஞ்சீவி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். பேபி ஷாலினி, அம்ரிஷ் புரி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருந்தனர். அப்படம் தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் வரவேற்பைப் பெற்றது.

'இந்திரா' படத்தை பி கோபால் இயக்க, மணி சர்மா இசையமைக்க, சிரஞ்சீவி, ஆர்த்தி அகர்வால், சோனாலி பிந்த்தே மற்றும் பலர் நடித்திருந்தனர். அன்றைய கால கட்டத்தில் அதிக வசூலைக் குவித்த தென்னிந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் இது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்கள் ஜெயசூர்யா - முகேஷ் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுநடிகர்கள் ஜெயசூர்யா - முகேஷ் மீது ... நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரை படத்திலிருந்தே நீக்கிய 2018 பட இயக்குனர் நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)