இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

350 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரம்தான் சொந்த ஊர். ஆச்சாரமான குடும்பம். அந்த குடும்பத்தின் ஆண்களோ, பெண்களோ நாடகம் பார்க்க கூட அனுமதி இல்லை.
என்றாலும் அஞ்சலிதேவியின் அப்பாவுக்கு சில நாடக நண்பர்கள் இருந்தார்கள். இதனால் திருட்டுத்தனமாக நாடகம் பார்த்து வருவார். அஞ்சலிதேவியின் ஊரில் அன்று ஒரு நாடகம். ஒரு குழந்தையின் கதையை மையப்படுத்திய நாடகம். டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அரங்கம் நிறைந்திருந்தது. ஆனால் அன்று அந்த நாடகத்தில் நடிக்க வேண்டிய சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவால் அவரால் வரமுடியவில்லை.
நாடகத்தை நிறுத்தினால் பெரும் பிரச்சினை ஏற்படும். அந்த நாடகத்தை ஏற்பாடு செய்தவர் அஞ்சலிதேவியின் தந்தையிடம் இதை சொல்லி அழுதார். திடீரென என்ன நினைத்தாரோ நேராக மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அங்கிருந்த தன் மகள் அஞ்சலிதேவியை அழைத்து வந்து, “என் புள்ள கற்பூரம் மாதிரி எதையும் உடனே புரிஞ்சுக்குவா இவளை தயார்படுத்து” என்று கூறிவிட்டார். சில மணி நேர பயிற்சியிலேயே அந்த நாடகத்தில் நடித்து முடித்தார் சிறுமியான அஞ்சலிதேவி.
அந்த நாடகத்தில் அஞ்சலிக்கு பெரிய வரவேற்பு கிடைக்க பின்னர், நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அழைக்க ஏகப்பட்ட வரவேற்பு அவருக்கு. பின்னர் நிரந்தர நாடக நடிகை ஆனார். நாடகத்தில் அஞ்சலியின் நடிப்பை பார்த்த சி.புல்லய்யா அவரை 'சுகரம்பா' என்று தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். அதில் ரம்பையாக அஞ்சலி நடித்து பரபரப்பு கிளப்பினார். தமிழில் 'ஆதித்யன் கனவு' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனது வாழ்க்கை பாதையை திருப்பி வாழ வைத்த அந்த சிறுமியை பின்னாளில் சந்தித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்ததாக அஞ்சலிதேவியே சில நேர்காணல்களில் கூறியுள்ளார். அவருக்கு இன்று 97வது பிறந்த நாள்.