வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா |
ஷோபா சந்திரசேகர், இன்றைய முன்னணி நடிகர், அரசியல் தலைவர் விஜய்யின் அம்மா என்கிற அளவில்தான் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். சிலருக்கு அவர் நல்லதொரு கர்நாடக இசை பாடகி என்பது தெரியும்.
பலரும் அறியாத பல முகங்கள் அவருக்கு உண்டு. ஷோபாவின் அப்பா ஒரு இசை குழுவையும், ஒரு நாடக குழுவையும் நடத்தி வந்தார். அந்த இசை குழுவில் பாடகியாவும், நாடகத்தில் நடிகையாகவும் தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் ஷோபா. நாடகங்களை இயக்க வந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா.
ஷோபாவின் தந்தையின் நாடகங்களை இயக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரை தனது வீட்டிலேயே தங்க வைத்தார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரை அவருக்கு மிகவும பிடித்துப்போகவே தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது ஷோபாவுக்கு வயது 17. அடுத்த வருடமே விஜய்யை பெற்றெடுத்தார். ஷோபா இந்து, சந்திரசேகர் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
ஆனாலும் ஷோபாவுக்கு நடிப்பதை விட பாடுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் பெரிய குருமார்களிடம் முறைப்படி இசை கற்றார். வீணை இசைக்க கற்றார். திருமணமான புதிதில் எஸ்.ஏ.சந்திரேசகர் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஷோபாவின் பாடல் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.
பின்னாளில் பாடகி, வீணை இசை கலைஞர் என்பதோடு இன்னிசை மழை, நண்பர்கள் என்ற இரண்டு படங்களையும் இயக்கினார். 13 படங்களுக்கு கதை எழுதினார், 9 படங்களை தயாரித்தார். இப்படி சகலகலாவல்லியாக இருந்த ஷோபா சந்திரசேகருக்கு இன்று 67வது பிறந்தநாள்.