‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
தெலங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜூனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
நீர்நிலைகள், அரசு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை தெலங்கானா அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 44 ஆண்டுகளாக ஐதராபாத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளின் விபரங்களை செயற்கைக்கோள் வாயிலாக அறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதில், மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா குளத்தின் பகுதியை பிரபல நடிகர் நாகார்ஜூனா ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அரங்கில் தான், 2015ல் தற்போதைய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்வுகள் நடந்தன. சினிமா சூட்டிங்கும் நடக்கிறது.
மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகார்ஜூனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது