குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு கிடைக்கும் விமர்சனங்கள், கமெண்ட்டுகளை கூட சந்தித்துவிடலாம். ஆனால், 'டிரோல்'களை சமாளிப்பது பெரும் கஷ்டம். தற்போதைய சமூக வலைத்தள யுகத்தில் 'டிரோல்'கள்தான் அதிகமாக வருகின்றன, கவனிக்கப்படுகின்றன. விதவிதமான டிசைன்களில், மீம்ஸ்களாக அவற்றை வெளியிடுகிறார்கள் பலர். அதில் உள்நோக்கம் கொண்ட டிரோல்கள்தான் அதிகமாக இருக்கும்.
சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் ஓடிடியில் வெளியான பின் இப்படியான டிரோல்களை அதிகம் சந்தித்தது. படத்தில் உள்ள பல குறைகளை ரசிகர்கள் அந்தப் படத்தின் வீடியோக்களை வைத்து ஆதாரங்களுடன் டிரோல் செய்தார்கள். ஒரு வாரம் தொடர்ந்த அந்த டிரோல் அதன்பின் புதிய படங்களின் வருகையால் அடங்கியது.
இப்போது தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு அப்படியான டிரோல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் இரு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. மற்ற மொழி ரசிகர்கள் படத்தைப் பற்றி அதிகம் விமர்சிக்காமல் உள்ளார்கள். ஆனால், ஹிந்தி சினிமா ரசிகர்கள் பலரும் படத்தை 'டிரோல்' செய்து வருகிறார்கள். அது தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி' ஆகிய படங்கள் ஹிந்தியிலும் வெளியாக அங்கு நல்ல வசூலைக் குவித்தன. மொத்தமாக 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. அக்ஷய் குமார், அஜய் தேவகன் உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சிலர் நடிக்கும் படங்கள் தியேட்டர்களில் படுதோல்வியை சந்திக்கின்றன. அவற்றிற்கு வசூலும் கிடைப்பதில்லை. அந்த ஆத்திரத்தில் ஹிந்தி ரசிகர்கள் பலர், சில குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் பலர் தென்னிந்தியத் திரைப்படங்களை குறி வைத்து டிரோல் செய்வதாகச் சொல்கிறார்கள்.