படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல், மற்றும் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்த 'வாழை' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பலரும் நேரிலேயே கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கொட்டுக்காளி' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்துடன் போட்டி போடும் விதத்தில்தான் 'வாழை' படமும் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், அந்தப் பதிவிற்கான கமெண்ட் பகுதியில் 'வெரிபைடு அக்கவுண்ட்' மட்டுமே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடு செய்துள்ளார்.
ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் அதில் கமெண்ட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு 'வெரிபைடு அக்கவுண்ட்' பதிவிடும் விதத்திலும் மட்டுமே 'செட்டிங்'ஐ மாற்றி மாற்றி வைத்து வருகிறார்.