நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'இந்தியன் 2'. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும், வசூலையும் குவிக்கவில்லை. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு இன்னும் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. கடந்த வாரம் சில புதிய படங்கள் வந்ததால் மக்கள் அந்தப் படங்கள் பக்கம் தாவியதால் 'இந்தியன் 2' பற்றிய கமெண்ட்கள் குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் அதை மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறது படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யா கொடுத்த ஒரு பேட்டி. அவரது காட்சிகள் இரண்டாம் பாகத்தில் குறைவாகவே இடம் பெற்றன. மூன்றாம் பாகத்தில் அவருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
சமீபத்தில் கொடுத்த அந்தப் பேட்டியில் படத்தில் தன்னுடைய வீடாகக் காட்டப்படும் 'செட்' சுமார் 8 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். வில்லனுடைய வீட்டிற்கே 8 கோடி செலவா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதனால்தான் பட்ஜெட் எகிறிவிட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.