நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் அடுத்த நான்கு மாதங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தி கோட், மெய்யழகன், கங்குவா, வேட்டையன், அமரன், விடாமுயற்சி,' என அடுத்தடுத்து சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படங்கள் நேரடியாக மோத உள்ளன. இந்தப் போட்டியிலிருந்து 'கங்குவா' விலகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அப்படி விலகாவிட்டால் போட்டி உறுதி.
தற்போது அதிகமான இளம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களுடன் போட்டி போடுவது என சீனியர் நடிகரான ரஜினிகாந்த் முடிவெடுத்துவிட்டார் என்றே திரையுலகில் சொல்கிறார்கள். வயசானாலும் தனக்கான வரவேற்பு குறையவில்லை என்பதை அவர் சொல்ல விரும்புகிறார் என்பதும் பேச்சாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 'வேட்டையன்' பட ரிலீஸ் பற்றிய அப்டேட் வந்தது. அடுத்து முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் பற்றிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ளார். விரைவில் அப்பாடல் வெளியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் விஜய்யின் 'தி கோட்' படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே 'வேட்டையன்' முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் இசையமைத்த 'இந்தியன் 2' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காத காரணத்தாலும் 'மனசிலாயோ' பாடலை அனிருத் அதிரடியாய் இசையமைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், யுவன் இசையில் வந்த 'தி கோட்' படத்தின் பாடல்களை மிஞ்சும் விதத்தில் 'வேட்டையன்' பாடல்கள் அமைந்து சாதனை புரிய வேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.