விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. சரித்திரம் கலந்த பேன்டஸி படமான இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 10ம் தேதி என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே அறிவித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என இன்று அறிவித்துள்ளார்கள்.
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அதற்குள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். 'வேட்டையன்' முன் யாரும் போட்டியிட முடியாது என ரஜினி ரசிகர்களும், 'கங்குவா' படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படம் என சூர்யா ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டு வருகிறார்கள்.