நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர். அதற்கு முன்பே அவர் 'வெப்பம்' படம் மூலம் அறிமுகமானவர். ஓடிடி வந்த பிறகு நானியின் பல தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அவற்றிற்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. கடந்த சில வருடங்களில் நானி நடிக்கும் தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியாகிறது.
அவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'சரிபொத சனிவாரம்' படம் தமிழில் 'சூர்யாஸ் சாட்டர்டே' என்ற பெயரில் டப்பிங் ஆகி ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள நானி, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, படத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாகச் சொன்னார். அவர் சொன்ன கதை, டிரைலர் ஆகியவற்றைப் பார்த்த பின்பு அப்படம் விக்ரம் நடித்து வெளிவந்த 'தில், கந்தசாமி' ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனத் தெரிகிறது. மக்களின் பிரச்சனைகளை அறிந்து 'சேவல்' முகமூடியுடன் போய் அவற்றை விக்ரம் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் ‛கந்தசாமி' படத்தின் கதை. 'தில்' படத்தில் இன்ஸ்பெக்டரான ஆசிஷ் வித்யார்த்தியை போலீஸ் வேலைக்குத் தேர்வான விக்ரம் எதிர்ப்பதுதான் கதை. இரண்டு கதைகளையும் கலந்து, கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது. படம் வெளிவந்த பின் எது உண்மை என்பது தெரிந்துவிடும்.