மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2024ம் ஆண்டின் எட்டாவது மாதம் இன்னும் 10 நாட்களில் முடிய உள்ளது. இந்த வார வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23, அடுத்த வார வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வெளியாக உள்ள படங்களில் 'வாழ்வியல்' பற்றிப் பேசும் சில உணர்ச்சிகரமான படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, விஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள 'கொட்டுக்காளி', மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை', மைக்கேல் கே ராஜா இயக்கியுள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை', ஸ்ரீவெற்றி இயக்கியுள்ள 'நாற்கரப்போர்' ஆகிய படங்கள் யதார்த்தமான வாழ்வியலை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படங்களாக இருக்கும் என அப்படங்களின் டிரைலர்கள் தெரிவிக்கிறது. ஒரே நாளில் இப்படியான படங்கள் வருவது ஆச்சரியம்தான். இப்படங்கள் ரசிகர்களும் பாராட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதா என்பது வெளிவந்த பின் தெரியும்.
அப்படங்களோடு “அதர்மக் கதைகள், சாலா, கடமை” ஆகிய படங்களுடன் சேர்த்து மொத்தம் 7 படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.