ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக தி கோட் என அழைக்கிறார்கள். இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருவதை ஒட்டி இன்று (ஆக.,17) இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
டீ-ஏஜிங்
இதில், பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. தந்தை - மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இதற்கு முன்னர் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதில் மிகவும் இளமையான வயதுடைய விஜய்யை டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
அஜித் வசனம்... கில்லி ரெபரன்ஸ்
வெங்கட் பிரபு இயக்கிய அஜித்தின் 50வது படமான ‛மங்காத்தா'வில் “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது...” என்று அஜித் பேசியிருப்பார். அதே டையலாக்கை விஜய் இந்த படத்தில் பேசியிருக்கிறார். அதுமட்டுன்றி, கில்லி படத்தில், விஜய் “மருதமலை மாமனியே முருகைய்யா..” என்ற பாடலை பாடும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதே காட்சி ரெபரன்ஸை இந்த படத்திலும் வெங்கட்பிரபு பயன்படுத்தியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.