ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பிரபல நடிகர்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் யாரோ தன்னுடைய சோசியல் மீடியா கணக்கை ஹேக் செய்து இப்படி வெளியிட்டுள்ளார்கள் என்று அப்போது கூறியிருந்தார் சுசித்ரா. அதன்பிறகு அவருக்கும் அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இருவருமே வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு விட்டனர்.
ஒரு வழியாக அந்த பிரச்சினை அடங்கி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பேட்டியில் கார்த்திக் குமார் பற்றி கூறிய சுசித்ரா அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் இது போன்ற பல பிரபலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவதற்கு அவர்தான் காரணம் என்றும் கூறி பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனை தொடர்ந்து அவரது முன்னாள் கணவர் கார்த்தி குமார், சுசித்ராவின் பேச்சு தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி காவல் துறையில் புகார் செய்தார். இது குறித்து காவல்துறையிலிருந்து சுசித்ராவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு அதற்கு அவர் பதில் அளிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தனது யுடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ள சுசித்ரா, கார்த்திக் குமார் பற்றி கூறிய கருத்துக்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி என்பவர் நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்காத வரை இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்றும் மேலும் நீங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் கூறியதை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்த்திக் குமாரிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசித்ரா.