இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக தி கோட் என அழைக்கிறார்கள். இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருவதை ஒட்டி இந்த படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி அன்று டிரைலர் வெளியாகும் என படக்குழு இன்று புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். முன்னதாக நேற்றே இதன் அறிவிப்பு வெளியாகும் என கல்பாத்தி அர்ச்சனா பதிவிட்டு இருந்தார். ஆனால் பணிகள் முடியாததால் அறிவிக்கவில்லை. இன்று நண்பகலில் வெங்கட்பிரபு கண்டிப்பாக இன்று அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டு இருந்தார். அதன்படி மாலையில் அப்டேட் வெளியாகிவிட்டது.