2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் அனைத்துமே தமிழ் படங்கள்தான் என்ற கருதிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மலையாளியான எம்.ஜி.ஆர் நடித்த ஒரே மலையாளப் படம் 'ஜெனோவா'. 1953ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் தயாரித்தனர். நாயகன் எம்ஜிஆர், நாயகி பி.எஸ்.சரோஜா. இருவரும் இரு மொழிகளிலும் நடித்தனர். வில்லனாக தமிழில் பி.எஸ்.வீரப்பா நடிக்க, மலையாளத்தில் அந்த வேடத்தில் ஆலப்பி வின்சென்ட் நடித்தார்.
இதனை மலையாள தயாரிப்பாளர் இ.பி.எப்பன் என்பவர் தயாரித்திருந்தார். மலையாள இயக்குனர் நாகூர் இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ஞானமணி, டி.ஏ.கல்யாணம் என 3 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். இது சரித்திர கதையாக இருந்தாலும் மாறுபட்ட முறையில் இதன் கதை எழுதப்பட்டிருந்தது.
படத்தில் எம்ஜிஆரின் பெயர் சிப்ரஸோ, வில்லன் வீரப்பாவின் பெயர் கோலோ, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் பெயர் அன்னாஸ். மலையாள வசனத்தை சுவாமி மிரம்மவ்ருதனும், தமிழ் வசனத்தை சுரதாவும் எழுதியிருந்தனர். இந்த படம் முதலில் மலையாளத்தில் வெளிவந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்தது.