ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய் கட்சி சார்பில் போட்டியிட அவரிடம் சீட் கேட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் புகழின் உச்சியில் இருக்கும்போதே இனிமேல் நடிக்க வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம். இப்படி எத்தனை பேர் செய்வார்கள். அரசியலிலும் அவர் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் கட்சியை அறிவித்தபோது அவரை படப்பிடிப்பில் சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன். கட்சி தொடங்கும் அறிக்கை வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன். கடைசி படம் என்று குறிப்பிடும்போது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் கட்சி தொடங்குவதால் மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். கட்சி பெயர் நன்றாக இருக்கிறது என்று கூறி தேர்லில் போட்டியிட எனக்கு ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி விட்டு வந்தேன். என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.